டிரெண்டிங்

எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் ஜனநாயகம் மீதான அச்சுறுத்தல்: ஆம் ஆத்மி

rajakannan

எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தல் என்று ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது. 

இரட்டை ஆதாயம் தரும் பதவி வகித்த விவகாரத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேரை தகுதி நீக்க செய்யுமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, 20 எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தகுதி நீக்கம் குறித்து டெல்லி அமைச்சர் கோபல் ராய் கூறுகையில், “குடியரசுத் தலைவரிடம் சென்று எங்களது நிலைப்பாட்டை கூறுவதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறலாம் என்று நம்பியிருந்தோம். ஆம் ஆத்மி தேவைப்பட்டால், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தை அணுகுவோம்” என்றார். ஆம் ஆத்மி மூத்த தலைவர் அஷூதோஷ், குடியரசுத் தலைவரின் உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது. ஜனநாயகத்தின் அச்சுறுத்தல் என்றார்.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான அல்கா லம்பா, “குடியரசுத் தலைவரின் முடிவு வலி தருவதாக உள்ளது. முடிவு செய்வதற்கு முன்பு குடியரசுத் தலைவர் எங்களிடம் பேசி இருக்க வேண்டும்” என்றார். இதனிடையே, தகுதி நீக்கம் விவகாரத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தார்மீக அடிப்படையில் அமைதி காக்க வேண்டும் என்று பாஜக மற்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தகுதிநீக்கம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கு இடைக்கால தடைவிதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும் வழக்கு விசாரணையில் உள்ளது.