டிரெண்டிங்

கோவா சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்தும் ஆம் ஆத்மி - 7 அம்ச திட்டம் வெளியீடு

கோவா சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்தும் ஆம் ஆத்மி - 7 அம்ச திட்டம் வெளியீடு

Veeramani

கோவாவில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

டெல்லியை பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடமிருந்த தட்டிப்பறித்த ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப், உத்திர பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநில தேர்தல்களில் கவனம் செலுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு கோவாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான களப் பணிகளையும் அந்த கட்சி தொடங்கியுள்ளது. கோவாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், வேலையில்லா இளைஞர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, அரசு வேலையில் 80 சதவீதம் கோவா மக்களுக்கு இடஒதுக்கீடு, கொரோனாவால் வேலையிழந்தவர்களுக்கு மாதந்தோம் 5 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட 7 அம்ச திட்டங்களை வெளியிட்டுள்ளார்.