டிரெண்டிங்

சதுரகிரி மலையில் வழிபாட்டுக்குச் சென்ற இளைஞர்... மூச்சுத் திணறி பரிதாப உயிரிழப்பு

kaleelrahman

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக் கோயிலுக்கு  வழிபாட்டிற்காக சென்ற வாலிபர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தரை மட்டத்தில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அம்மாவாசை, பௌர்ணமி என குறிப்பிட்ட சில நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் ஐப்பசி மாதம் பௌர்ணமி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு 28 முதல் வரும் 31ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரளான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து கொண்டு வந்த நிலையில், சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் கோட்டை தலைவாசல் என்னும் பகுதியில் மதுரையை சேர்ந்த ஐயப்பன் என்ற வாலிபருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவரது உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.