டிரெண்டிங்

நான் ஜனநாயக கடமை ஆற்றிவிட்டேன், நீங்கள்? ஏ.ஆர்.ரகுமான் ட்விட்

நான் ஜனநாயக கடமை ஆற்றிவிட்டேன், நீங்கள்? ஏ.ஆர்.ரகுமான் ட்விட்

webteam

நான் ஜனநாயகக் கடமை ஆற்றிவிட்டேன் என்று இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ட்விட் செய்துள்ளார்.

மக்களவைக்கு ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடந்து வருகிறது. முதல் கட்டத் தேர்தல் கடந்த 11 ஆம் தேதி நடந்தது. இதில் 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று நடக்கிறது. 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில், 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

வாக்காளர்கள் காலையிலேயே வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களிக்கத் தொடங்கினர். தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர். நடிகர், அஜீத், விஜய், சூர்யா, கார்த்தி, சசிகுமார் உட்பட பலர் காலையிலேயே வாக்களித்தனர். அதே போல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், சென்னை சாமியார் மடம் வாக்குச் சாவடியில் இன்று காலை வாக்களித்தார். பின்னர் ட்விட்டரில்,’ நான் வாக்களித்து விட்டேன், நீங்கள்?’’ என்று பதிவிட்டுள்ளார்.