டிரெண்டிங்

மக்களிடம் ஒவ்வொரு ரூபாயாக பெற்று வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்

webteam

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் போட்டியிட சமூக ஆர்வலர் பிரபாகரன் என்பவர் 10 ரூபாய் நணயங்களால் 10 ஆயிரம் ரூபாயினை தட்டில் ஏந்திய படி வந்து நூதன முறையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.  

சூலூர் சட்டமன்ற தொகுதியில் இடைதேர்தல் நடைபெறுவதையொட்டி திங்கள் கிழமை முதல் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை சூலூர் வட்டாச்சியர்  அலுவலகத்தில் தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பாக கருமத்தம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் 10 ரூபாய் நணயங்களால் 10 ஆயிரம் ரூபாயினை தட்டில் ஏந்திய படி வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.  

சுயேட்சை வேட்பாளர் கொடுத்த டெபாசிட் தொகையை 6 அலுவலர்கள் சேர்ந்து எண்ணி சரிபார்த்த பின்னர், மனுவை பெற்றுக்கொண்டனர். சாதாரண மனிதர்களும் தேர்தலில் போட்டியிடலாம் என்பதை வலியுறுத்தி, பொது மக்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒரு ரூபாய் களாகவும், சிலர் விரும்பி கொடுத்த தொகையை பெற்றும் வேட்பு மனு தாக்கல் செய்ததாக அவர் தெரிவித்தார். பேருந்துகளில் 10 ரூபாய் நணயங்களை பெற மறுக்கின்றனர், அதனால் 10 ரூபாய் நணயங்கள் செல்லும் என்பது குறித்து விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் வசூல் செய்த தொகையை 10 ரூபாய் நணயங்களாக மாற்றி டெபாசிட் தொகையாக வழங்கியதாக பிரபாகரன் தெரிவித்தார்.