டிரெண்டிங்

சும்மா இருப்பதற்கு சம்பளமா! எதுமே செய்யாமல் ரூ.5000 சம்பாதிக்கும் ஜப்பான் இளைஞர்!

JananiGovindhan

“எந்த வேலையும் செய்யாமல் சும்மாவே இருப்பது எவ்வளவு பெரிய வேலை தெரியுமா” என வடிவேலு பட காமெடி ஒன்று இருக்கும். ஆனால் இந்த ஜப்பானியர் விஷயத்தில் அது வெறும் சினிமா டையலாக்காக மட்டும் இல்லாமல், சும்மாவே இருப்பதற்காக கிட்டத்தட்ட 5 ஆயிரம் ரூபாய் வருமானம் பெறுகிறார் என்றால் நம்ப முடிகிறதா?

சரியாகத்தான் படிக்கிறீர்கள். ஜப்பானின் டோக்கியோ நகரைச் சேர்ந்த ஷொஜி மொரிமொட்டோ என்ற 38 வயதான அந்த நபர் எதுவுமே செய்யாமல் இருப்பதற்காக ஆயிரக்கணக்கில் சம்பளம் பெறுகிறார் என ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வாயிலாக அறிய முடிகிறது.

இந்த செய்தியை அறியும் வேளையில் நீங்கள் கடினமாக உழைத்துக் கொண்டிருப்பவராக இருந்து, ஷொஜியின் வேலை குறித்து பொறாமை கொள்பவராகக் கூட இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.

ஒருவருக்கு கம்பெனி கொடுப்பதற்காக பத்தாயிரம் யென் அதாவது 5,633 ரூபாய் சம்பளமாக ஷொஜி மொரிமொட்டோ பெறுகிறார். நான்கு ஆண்டுகளாக இதையே முழுநேர வேலையாக செய்து வரும் ஷொஜி, இதுவரையில் எதுவுமே செய்யாமல் 4000 செஷன்ஸை முடித்திருக்கிறாராம்.

இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் பேசியுள்ள ஷொஜி மொரிமொட்டோ, “என்னை நானே வாடகைக்கு விடுகிறேன். என்னுடைய clients எங்க இருந்தாலும் அவர்களுக்கு வெறுமனே உடன் இருக்கும் ஒரு நபராகவே இருப்பேன். வேறு எதுவுமே செய்ய மாட்டேன்.” என தெரிவித்துள்ளார்.

இவருக்கு ட்விட்டரில் 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேலான ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். பெரும்பாலான கஸ்டமர்கள் ஷொஜி மொரிமொட்டோவின் கம்பெனி வேண்டுமென்றால் அவரை micro blogging தளத்தின் மூலமாகவே தொடர்புகொள்ள முடியும் என்றும், இதுவரை ஒரே நபருக்கு 270 முறை கம்பெனி கொடுத்திருப்பதாகவும் மொரிமொட்டோ கூறியிருக்கிறார்.

இந்த வேலையை செய்யும் போது கஸ்டமரின் எந்த சுய விஷயங்களிலும் தலையிடாதவகையில் தனக்கென ஒரு எல்லையுடனேயே இருப்பாராம் ஷொஜி. அதேபோல பாலியல் ரீதியான எந்த வேலைகளையும் அவர் இதுவரை ஏற்றுக் கொண்டதில்லையாம்.

மொரிமொட்டோவின் சமீபத்திய கிளையண்ட்டான date analyst அருணா சிதா என்ற 27 வயது பெண் பேசுகையில், “பொது இடங்களில் புடவை அணிந்து வருவது எனக்கு பதட்டமக இருந்தது. புடவை அணிந்து சென்றால் என்னுடைய நண்பர்களுக்கு நான் வேடிக்கையாக தெரிவேன். ஆனால் ஷொஜியிடம் இருக்கும் போது அப்படி உணர்வு எனக்கு ஏற்பட்டதில்லை” எனக் கூறியுள்ளார்.

தன்னைத்தானே வாடகைக்கு விடும் வேலையை செய்வதற்கு முன்பு மொரிமொட்டோ ஒரு பதிப்பக நிறுவனத்தில் பணிபுரிந்தார், அங்கு அவர் ஒன்றும் செய்யாததற்காக கண்டிக்கப்பட்டிருக்கிறார்.

'ஒன்றுமே செய்யாமல் இருப்பது' மதிப்புமிக்கதாக இருக்கிறது என நினைக்கிறார்கள், ஏனென்றால் அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் உண்மையில் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மக்கள் எந்த குறிப்பிட்ட விதத்திலும் பயனுள்ளதாக இருக்க வேண்டியதில்லை" மொரிமொட்டோ தெரிவித்திருக்கிறார்.