இப்போது சோஷியல் மீடியாக்களில் எங்கு பார்த்தாலும் செல்லப் பிராணிகளின் க்யூட்டான வீடியோக்களும் போட்டோக்களும்தான். நாய்க்குட்டிகள் மற்றும் பூனைகள் செய்யும் வேடிக்கையான செயல்கள் பெரும்பாலவர்களை கவர்ந்து இழுக்கிறது. இவை உலகளவில் மிகவும் பிரபலமாகி வருகின்றன.
சமீபத்தில் 'out of context cats' என்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியான ஒரு வீடியோ மிகவும் பிரபலமாகி வருகிறது. ஆனால் அது புதிதாக எடுக்கப்பட்டது அல்ல. இந்த பக்கத்தில் பகிரப்பட்டதால் பிரபலமடைந்தது.
ஒரு குட்டி நாய் இளஞ்சிவப்பு நிற டி-ஷர்ட்டை அணிந்துகொண்டு அமர்ந்திருக்கிறது. சோஃபாவில் அமைதியாகப் படுத்திருக்கும் பூனை எழுந்து செல்ல முயற்சிக்கும் நாயின் சட்டையை பிடித்து இழுக்கிறது. நாய் மீண்டும் நகர முயற்சித்தாலும் பூனை விடுவதாக இல்லை. இது ஒரு விதத்தில் அந்த இரண்டு பிராணிகளிடையே உள்ள ஆழமான அன்பை வெளிக்காட்டுகிறது. நாயை விட்டு பிரிய பூனைக்கு மனமில்லையோ!!
அனைவரையும் ரசிக்கவைத்த இந்த வீடியோ 1.5 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களையும், ஏராளமான கேளிக்கை கமெண்டுகளையும் பெற்றுள்ளது.