டிரெண்டிங்

ஆடுகளை கொன்றதால் கவலையிலிருந்த விவசாயிகள் : கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட 7வது சிறுத்தை

ஆடுகளை கொன்றதால் கவலையிலிருந்த விவசாயிகள் : கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட 7வது சிறுத்தை

JustinDurai

நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே வைக்கப்பட்ட வனத்துறை கூண்டில் சிறுத்தை சிக்கியது.

நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே உள்ள திருப்பதியாபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார்.

கடந்த 8ம் தேதி வீட்டில் கட்டப்பட்டிருந்த இரண்டு ஆடுகளை சிறுத்தை ஒன்று கடித்து குதறியது. தகவலறிந்த வனத்துறையினர் வந்து பார்வையிட்டனர். அப்போது சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, கடந்த 9ஆம் தேதி வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.

நேற்று காலை இந்த கூண்டில் இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை பிடிபட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து கூண்டுடன் சிறுத்தையை மீட்டுச் சென்று முண்டந்துறை வனச்சரகத்திற்கு உட்பட்ட கன்னிக்காட்டி வனப்பகுதிக்குள் பத்திரமாக மீட்டனர். ஏற்கனவே இப்பகுதியில் 6 சிறுத்தைகள் கூண்டில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.