டிரெண்டிங்

பண்பாட்டு சர்வாதிகாரம்: மத்திய அரசுக்கு எதிராக கூட்டறிக்கை

பண்பாட்டு சர்வாதிகாரம்: மத்திய அரசுக்கு எதிராக கூட்டறிக்கை

webteam

பசுவதைத் தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை திரும்பப் பெற திமுகவின் ஸ்டாலின் உள்ளிட்ட 7 கட்சித் தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். மாடு, எருமை, ஒட்டகம் ஆகிய கால்நடைகளை இறைச்சிக்காக விற்க தடை விதித்திருப்பது மக்களை பாதிக்கும் என அவர்கள் கூறியுள்ளனர். இவ்விவகாரத்தில் ஜனநாயக மரபுகள் மீறப்பட்டுள்ளதாகவும் இம்முடிவு விவசாயிகள் வாழ்க்கையை புரட்டிப் போடும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசின் முடிவு ஒற்றை கலாசாரத்தை திணிக்கும் பண்பாட்டு சர்வாதிகாரம் என்றும் தலைவர்கள் கூறியுள்ளனர். அரசின் எதேச்சதிகார செயலை எதிர்த்து மக்கள் வீதிக்கு வரவேண்டும் என்றும் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா ஆகியோர் கூட்டாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.