டிரெண்டிங்

7.5 சதவீத இட ஒதுக்கீடு கவர்னர் நல்ல முடிவை எடுப்பார் - பாஜக துணை தலைவர் அண்ணாமலை

kaleelrahman

சென்னை தாம்பரத்தில் தனியார் ஆயுர்வேத மதுத்துவமனையை பாஜக துணை தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.


சென்னை தாம்பரத்தில் தனியார் ஆயுர்வேத மருத்துவமனையை பாஜக துணை தலைவர் அண்ணாமலை திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்hர் அப்போது அண்ணாமலை பேசுகையில்: தமிழகத்தில் பாஜக பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது. முக்கிய காரணம் திராவிட கட்சிகள் தேய்ந்து வருகிறது.


இளைஞர்கள் பாஜகவில் அதிகளவில் சேர்ந்து வருகின்றனர். பிரதமரின் திட்டங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வேரூன்றுவதை பார்க்கலாம்.


பாஜகவில் ரவுடிகள் இணைவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு சில தவறுகள் நடந்திருக்கலாம் அவர்களுக்கு இங்கு இடமில்லை. 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து கட்சியின் நிலைப்பாடு ஆதரவு தான் அதனை ஏற்பதாக நட்டா அமைச்சராக இருந்த போதே அதனை வரவேற்பதாக பேசி இருக்கிறார்.


பாஜக சார்பில் அண்ணாமலையின் கோரிக்கையும் கவர்னர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என்பதே என்றார். நிச்சயம் கவர்னர் நல்ல முடிவை எடுப்பார் நல்லது நடக்கும் என்றார்.