டிரெண்டிங்

7.5% உள்ஒதுக்கீடு அரசாணை: கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு

7.5% உள்ஒதுக்கீடு அரசாணை: கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு

Veeramani

அரசு வெளியிட்டுள்ள அரசாணை மூலமாவது, ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மருத்துவ கல்வி இடங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. நீட் திணிப்பு, ஆளுநர் இழுத்தடிப்பு என பல முட்டுக்கட்டைகள் மூலம் ஏழை மாணவர்களுக்கு தொடர் அநீதி இழைக்கப்பட்டு வந்துள்ளது. உண்மையில், மாநில அரசின் சட்டத்தை ஆளுநர் இழுத்தடித்து வருவது, மாநில மக்களுக்கு செய்யப்படும் அவமதிப்பாகும்.இப்போது அரசு வெளியிட்டுள்ள அரசாணை மூலமாவது, ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற வேண்டும் என எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்