டிரெண்டிங்

கோவை விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்திவரப்பட்ட 6.88 கிலோ தங்கம் பறிமுதல்.!

கோவை விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்திவரப்பட்ட 6.88 கிலோ தங்கம் பறிமுதல்.!

kaleelrahman

ரூ.3.6 கோடி மதிப்புள்ள 6.88 கிலோ கடத்தல் தங்கம்  மத்திய வருவாய் மற்றும் புலனாய்வு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.


ரகசிய தகவலின்படி, கோவை விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், ஷார்ஜாவிலிருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில் பயணித்த 6 பயணிகளை சோதனை செய்தனர். அதில் அவர்கள் 6 பேரும் தங்களின் உடை மற்றும் உள்ளாடைகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட 6.88 கிலோ தங்கம் பேஸ்ட் வடிவில் மறைத்து வைக்கப் பட்டிருந்தது தெரியவந்தது.


இதனையடுத்து, பலகட்ட வழிமுறைகளை பின்பற்றி அதிகாரிகள் தங்கத்தை பிரித்தெடுத்தனர். பின்பு தங்கத்தை கடத்தி வந்த பாஷா, நாசர், சஜிப், சாகுல் ஹமீத், யுவராஜ், தர்மராஜ் ஆகிய 6 பேரையும் கைது செய்தபின் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கமிஷன் தொகைக்காக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொரோனா காரணமாக வந்தே பார்த் விமானம் உட்பட விமானங்கள் அனைத்திலும் சோதனை பெரியதாக இருக்காது என்ற எண்ணத்தில் கடத்தல் அதிகரித்து வருவதாக புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர்.