நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஒரே நேரத்தில் 4 செந்நாய்கள் உயிரிழந்த சம்பவம் அதர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதிக்குள் செந்நாய் ஒன்று இறந்து கிடப்பதை பார்த்தனர். பின்பு செந்நாய் இறந்து கிடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது மேலும் மூன்று நாய்கள் இறந்து கிடந்ததை கண்டு வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து உயிரிழந்த 4 செந்நாய்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மாதிரிகளை ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் நான்கு நாய்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதால் அவை விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.