டிரெண்டிங்

4 தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு

4 தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு

Rasus

தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.

அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்து திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துவிட்டன. ஆனால் அதிமுக, அமமுக சார்பில் வேட்பாளர்களை அறிவித்தும் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை.

இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இவ்விரு கட்சியின் வேட்பாளர்களும் வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளனர். நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட இதுவரை 98 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், அதிகப்பட்சமாக அரவக்குறிச்சி தொகுதியில் 42 வேட்புமனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், சூலூர் தொகுதியில் 23 வேட்புமனுக்களும்,‌ திருப்பரங்குன்றம் தொகுதியில் 20 வேட்புமனுக்களும், ஒட்டப்பிடாரத்தில் 13 வேட்புமனுக்களும் போட்டியிட தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை தாக்கல் செய்யப்பட்டுள்ள 98 வேட்புமனுக்களில் 62 வேட்புமனுக்கள் சுயேச்சையாக போட்டியிட தாக்கல் செய்யப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.