திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக, அமமுக வேட்பாளர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டனர். இந்நிலையில் 4 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி,
அரவக்குறிச்சி- வி.வி.செந்தில்நாதன்
ஒட்டப்பிடாரம்- மோகன்
சூலூர்- வி.பி. கந்தசாமி
திருப்பரங்குன்றம்- எஸ்.முனியாண்டி
ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.