டிரெண்டிங்

மக்களவைத் தேர்தல்: 1 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம்

மக்களவைத் தேர்தல்: 1 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம்

webteam

மக்களவைத் தேர்தலில், ஒரு மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம் வெளியாகியுள்ளது.

17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. பீகாரில் 8, ஜார்கண்டில் 3, பஞ்சாப்பில் 13, மேற்கு வங்காளத்தில் 9, இமாசலப்பிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, உத்தரபிரதேசத்தில் 13, சண்டிகரில் ஒன்று என 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

இன்றைய தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், சத்ருஹன் சின்ஹா, மனோஜ் சின்ஹா, ஆர். பி சிங் உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ஒரு மணி நேர நிலவரப்படி, வாக்குப் பதிவு சதவிகிதம் வெளியாகியுள்ளது. அதன்படி, 39.85 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 

பீகாரில் 36.20 சதவிகிதம், இமாச்சலப்பிரதேசம் 34.47 சதவிகிதம், மத்திய பிரதேசம் 43.89 சதவிகிதம், பஞ்சாப் 36.66 சதவிகிதம், உத்தரபிரதேசம் 36.37 சதவிகிதம், மேற்கு வங்கத்தில் 47.55 சதவிகிதம், ஜார்க்கண்ட்டில் 52.89 சதவிகிதம், சண்டிகரில் 35.60 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.