தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் தொடர்பாக சென்னையில் இதுவரை 324 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
உரிய ஆவணங்கள் இன்றி பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொண்டு சென்றதாக 383 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவின் சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உரிமம் பெற்ற 1799 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 43 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 1954 ரவுடிகளிடம் பிராமணப் பத்திரத்தில் 6 மாதம் எந்த விதமான குற்றங்களிலும் ஈடுபடாமல் இருக்க கையெழுத்து பெற்றுள்ளதாகவும் சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.