டிரெண்டிங்

வாலிபர்களால் வடமாநில தம்பதியின் 3வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை

வாலிபர்களால் வடமாநில தம்பதியின் 3வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை

kaleelrahman

அம்பத்தூரில் 3வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரு வாலிபர்களை கைது செய்த காவலர்கள் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

சென்னை அம்பத்தூர், ஞானமூர்த்தி நகர், ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்களது வீட்டின் அருகில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை பகுதியைச் சேர்ந்த வளன் (26), நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (22) இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ள இருவரும் அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகின்றனர்.

இவர்களது வீட்டுக்கு 3வயது பெண் குழந்தை அடிக்கடி சென்று விளையாடி கொண்டிருப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை குழந்தை அவர்களது வீட்டுக்கு சென்று உள்ளது. அப்போது, அந்த குழந்தைக்கு வளன், சுபாஷ் இருவரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். பின்னர், குழந்தை வீட்டுக்கு ஓடி வந்து அழுது கொண்டே இருந்துள்ளது.

இதனையடுத்து, தம்பதியினர் வாலிபர்களிடம் சென்று கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் குழந்தையிடம் தவறாக நடந்து உள்ளது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ரமணி தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து வளன், சுபாஷ் இரு வாலிபர்களையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இருவரும் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதன் பிறகு, போலீசார் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் இன்று மாலை கைது செய்தனர்.