குஜராத், ஹிமாச்சல பிரதேசம் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தனியார் ஆங்கில ஊடகங்கள் நடத்திய முதல்கட்ட கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஹிமாச்சல பிரதேசம் சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் 9-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. குஜராத்தில் டிசம்பர் 9ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவும், இன்று இரண்டாம் கட்ட வாக்குப் பதிவும் நடைபெற்றது. வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டு மாநிலங்களுக்கும் டிசம்பர் 18-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், வாக்குப்பதிவு முடிவடைந்ததை அடுத்து தனியார் ஆங்கில செய்தி ஊடகங்கள் சார்பில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. தொலைக்காட்சிகள் சார்பில் தனித்தனியாக கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அனைத்து கருத்து கணிப்புகளிலும், ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை பாஜக கைப்பற்றும் என்றும் குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்கவைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 110 இடங்களிலும், இமாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 55 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன. காங்கிரஸ் கட்சி இரண்டு மாநிலங்களிலும் பெரும் பின்னடைவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 70 இடங்கள் வரைதான் கிடைக்கும் என்று தெரிகிறது.
கருத்து கணிப்புகள் விவரம்:
ஜான் கி பாத் : பாஜக-115, காங்கிரஸ்-65 மற்றவர்கள் 2
நிர்மன் டிவி : பாஜக-104, காங்கிரஸ்-75 மற்றவர்கள் 4
சஹாரா சமாய் : பாஜக-112, காங்கிரஸ்-68 மற்றவர்கள் 2
சி-வோட்டர் : பாஜக-108, காங்கிரஸ்-74
இந்தியா டுடே : பாஜக-107, காங்கிரஸ்-74
(ஆக்சிஸ் சர்வே)