டிரெண்டிங்

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்க்கு இரண்டு தொகுதிகள்

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்க்கு இரண்டு தொகுதிகள்

Rasus

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தல் தொடர்பாக திமுக கூட்டணியில் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சிக்கு பத்து இடங்களும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக- இ.கம்யூனிஸ்ட் இடையே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதனிடையே இதுகுறித்து பேசியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “ திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தனது கதிர் அரிவாள் சின்னத்திலேயே போட்டியிடும். அத்துடன் வருகின்ற 21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் திமுகவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்கும்” என்றார்.