தகுதி நீக்கம் செய்யட்டப்பட்ட 18 எம்எல்ஏக்களின் சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக இருப்பதாக சட்டபேரவை பேரவைச் செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து சட்டப்பேரவை செயலாளர் பூபதி தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தகுதி நீக்கம் செய்யட்டப்பட்ட 18 எம்எல்ஏக்களின் சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக இருக்கிறது. தமிழக அரசின் இணையதளத்தில் இருந்து 18 எம் எல் ஏக்களின் பெயர்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் உத்தரவிட்டிருந்தார். பேரவை விதிகளின்படி, இன்று முதல் தகுதி நீக்கம் செய்யபடுவதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டபேரவை பேரவைச் செயலாளர் முறைப்படி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.