டிரெண்டிங்

கட்சி தொடங்கி 16 ஆண்டுகள்...தேமுதிக இதுவரையில் கடந்து வந்த தேர்தல் பாதை!

கட்சி தொடங்கி 16 ஆண்டுகள்...தேமுதிக இதுவரையில் கடந்து வந்த தேர்தல் பாதை!

sharpana

தேமுதிக தொடங்கப்பட்ட 16 ஆண்டுகளில் இதுவரை 3 சட்டப்பேரவைத் தேர்தல்களையும், 3 நாடாளுமன்றத் தேர்தல்களையும் சந்தித்துள்ளது. இதில் 2 தேர்தல்களில் மட்டும் அக்கட்சி தனித்து போட்டியிட்டது. அதன்பிறகான தேர்தல்களில் கூட்டணி அமைத்தே போட்டியிட்டு வந்துள்ளது. தேமுதிகவின் பாதையை பார்க்கலாம்.

நடிகர் விஜயகாந்த் 2005 ஆம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியை தொடக்கினார். அதிமுக, திமுகவுக்கு மாற்றாக முன்னிறுத்திக் கொண்ட தேமுதிக, 2006 சட்டப்பேரவைத் தேர்தலிலும், 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டது. 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக 8.4 சதவிகித வாக்குகளை பெற்றது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் தனித்து போட்டியிட்ட அக்கட்சி 10.3 சதவிகித வாக்குகளை பெற்றது.

அடுத்து 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக, 41 தொகுதிகளில் போட்டியிட்டு, 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வாக்கு சதவிகிதம் 7.9 ஆகஇருந்தது.

அடுத்து, 2014 நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 5.1 சதவீதம் வாக்குகளை பெற்றது.

2016 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்ட போது 104 தொகுதிகளில் போட்டியிட்டு 2 புள்ளி 4 சதவிகித வாக்குகளையே பெற்றது.

2019 நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக எந்த கூட்டணியில் இருக்கப்போகிறது என்ற கேள்வியும் பரபரப்பும் நீடித்த நிலையில், இறுதியில் அதிமுக, பாஜக கூட்டணில் இணைந்து போட்டியிட்ட தேமுதிக, 2.2 சதவீத வாக்குகளையே பெற்றது.