டிரெண்டிங்

அதிமுக நிர்வாகிகள் 156 பேர் அதிரடி நீக்கம்

அதிமுக நிர்வாகிகள் 156 பேர் அதிரடி நீக்கம்

Rasus

கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாக தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 156 பேர் அடிப்படை உறு‌ப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிமுகவின் ஒ‌ருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் ஏற்படுத்திய காரணத்திற்காக தஞ்சாவூர் வடக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் ஜோதி, கும்பகோணம், அம்மாப்பேட்டை பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளை நீக்கம் செய்வதாக தெரிவித்துள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை, தொடர்ச்சியாக அதிமுகவின் பொறுப்பிலிருந்து ஓபிஎஸ், ஈபிஎஸ் நீக்கி வருவது குறிப்பிடத்தக்கது.