டிரெண்டிங்

குஜராத்தில் 150 இடங்கள்: பாஜக தலைவர் நம்பிக்கை

குஜராத்தில் 150 இடங்கள்: பாஜக தலைவர் நம்பிக்கை

webteam

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா 150க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜிது வகானி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

குஜராத்தில் இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. குஜராத் சட்டமன்றத்தின் மொத்தம் உள்ள 182 தொகுதியில், 89  தொகுதிக்கான முதல் கட்ட வாக்குப்பகுதி இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மேற்கு பவ் நகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் ஜிது வகானி குஜராத் தேர்தலில் பாஜக 150க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெரும் என்று தெரிவித்துள்ளார். 

வாக்கு செலுத்திய பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், பிரதமர் மோடி தலைமையின் கீழ் பாரதிய ஜனதாவுக்கு இந்த வெற்றி சாத்தியம் என்றும் கூறினார். இதில் தடைகள் ஏதும் இல்லை என்றும் ஜிது வகானி தெரிவித்தார்.