டிரெண்டிங்

ஆர்.கே.நகரில் மொத்தம் 145 பேர் வேட்புமனு தாக்கல்: இன்று பரிசீலனை

ஆர்.கே.நகரில் மொத்தம் 145 பேர் வேட்புமனு தாக்கல்: இன்று பரிசீலனை

Rasus

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று பரிசீலிக்கப்படுகின்றன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று தான் கடைசி நாள். ஏற்கனவே அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துவிட்ட நிலையில், கடைசி நாளான நேற்றும் வேட்புமனு தாக்கல் செய்ய ஏராளமானோர் குவிந்திருந்தனர். கடைசி நாளான நேற்று மட்டும் பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன், நடிகர் விஷால், ஜெ.தீபா உள்ளிட்ட 101 பேர் மனு தாக்கல் செய்தனர். மொத்தமாக 145 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவர்களில் 7 பேர் பெண்கள் ஆவர்.

இந்நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் இன்று பரிசீலிக்கப்படுகின்றன. மனுக்களை திரும்பப் பெற நாளைமறுதினம் கடைசி நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைமறுதினம் மாலையில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.