டிரெண்டிங்

தமிழகத்தில் தேர்தலுக்காக 14,215 சிறப்பு பேருந்துகள் - போக்குவரத்துத் துறை அறிவிப்பு

தமிழகத்தில் தேர்தலுக்காக 14,215 சிறப்பு பேருந்துகள் - போக்குவரத்துத் துறை அறிவிப்பு

Sinekadhara

தேர்தலில் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் வாக்களிக்க வசதியாக 14,215 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வெளியூர்களில் தங்கி வேலை செய்பவர்கள் சொந்த ஊர்களுக்கு வாக்களிக்கச் செல்ல ஏதுவாக ஏப்ரல் 1 முதல் 5ஆம் தேதிவரை 5 நாட்களுக்கு சென்னையில் இருந்து தினசரி 3,090 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்தும் பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

பண்டிகை நாட்களில் செயல்படுவதுபோல சென்னையில் 5 இடங்களில் இருந்து இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கோயம்பேடு, மாதவரம், கேகே நகர், பூந்தமல்லி தாம்பரம்(மெம்ப்ஸ், ரயில் நிலையம்) ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.