ஆட்சியமைக்க பாஜக முயற்சிக்கும் நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 12 பேர் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு வரவில்லை.
கர்நாடகாவில் அடுத்த ஆட்சியை முடிவு செய்யும் நிலையில் ஆளுநர் வஜூபாய் வாலா இருக்கிறார். அவர் எடுக்கப்போகும் முடிவு என்ன என்று நாடே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 12 பேர் கூட்டத்திற்கு வரவில்லை.
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உரிமை கோர மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளுமே முடிவு செய்துள்ளதால் யாரை ஆளுநர் முதலில் ஆட்சி அமைக்க அழைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 12 பேர் கூட்டத்திற்கு வரவில்லை. அக்கூட்டத்தில் 12 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை என்பது குழப்பத்தையும் , பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.