டிரெண்டிங்

திமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு 10 இடங்கள் ? இன்று அறிவிப்பு..!

திமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு 10 இடங்கள் ? இன்று அறிவிப்பு..!

Rasus

திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு குறித்து இன்று அறிவிக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 10 தொகுதிகளை காங்கிரஸ் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அறிவிப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தவிர மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதலில் காங்கிரஸ்-திமுக இடையே தான் தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள், திமுகவினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையை கட்சித் தலைமையிடம் எடுத்துக் கூறினர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் விவரித்தனர். தமிழகத்தில் எந்தெந்தத் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து ஆலோசித்தனர்.

இதைத்தொர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திமுக எம்.பி கனிமொழி சந்தித்து தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தொகுதிப் பங்கீடு குறித்து இன்று அறிவிக்கப்படும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். திமுகவிடம் இருந்து புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனை திமுக ஏற்றுக்கொண்டதா இல்லையா என்பது இன்று தெரியவரும்.