டிரெண்டிங்

“போக்குவரத்து துறைக்கு பாதிப்பு இல்லை” : அமைச்சர் கே.சி.வீரமணி

“போக்குவரத்து துறைக்கு பாதிப்பு இல்லை” : அமைச்சர் கே.சி.வீரமணி

webteam

டீசல் விலை உயர்வால் போக்குவரத்து துறைக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சார்பில் 20 புதிய பேருந்துகளை வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அரக்கோணம் எம்.பி கோ.அரி ஆகியோர் துவக்கிவைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி “டீசல் விலையெற்றத்தால் இதுவரை போக்குவரத்து துறைக்கு எதுவும் பாதிப்பு இல்லை. டீசல் விலையை குறைப்பதர்க்கான முயற்ச்சியை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. 


இதனால் மக்களுக்கு கூடுதல் பழு ஏற்பட்டிருந்தாலும் கூட மக்கள் எந்த வித சலிப்பும் இன்றி தொடர்ந்து பயணம் மேற்க்கொண்டு வருகிறார்கள். தற்போது இயக்கப்படும் புதிய பேருந்துகளால் மக்களிடம் பெறும் வரவேற்ப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் பேருந்துகளை காட்டிலும் அரசு பேருந்துகளில் பல்வேறு வசதிகள் உள்ளது. இனி வரும் காலங்களிலும் புதிய பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும்” என்றார்.

மேலும் புதிய பேருந்துககில் இதுவரை எந்த குறைகளும் இல்லை. ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் போக்குவரத்து துறை மற்றும் தங்களது பார்வைக்கு கொண்டுவப்டும் பட்சத்தில் அவை தீர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.