டிரெண்டிங்

‘எனது தலைமையிலான அரசு’ - ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி

‘எனது தலைமையிலான அரசு’ - ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி

rajakannan

பொதுமேடைகளில் பேசும்போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பல்வேறு பாணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையாண்டு வருகிறார்.

முன்னாள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பொதுமேடைகளில் பேசும்போது எனது தலைமையிலான அரசு என்ற வாசகத்தை அடிக்கடி பயன்படுத்துவார். தற்போது முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமியும் அதேபோல் ‘எனது தலைமையிலான அரசு’ என்பதை பயன்படுத்தி பேசி வருகிறார்.

சென்னை பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழாவில், இன்று பேசிய அவர் எனது தலைமையிலான அரசு கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று தெரிவித்தார். அதேபோல், ஜெயலலிதாவை போன்று எடப்பாடி பழனிசாமியும் ஒவ்வொரு மேடையிலும் குட்டி கதைகளை கூறிவருகிறார்.

முன்னதாக, ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றபோது, ஜெயலலிதாவை போல் உடை அணிவது உள்ளிட்ட பல்வேறு பாணிகளை கையாண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தீபாவும் சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.