டிரெண்டிங்

’’உங்களிடமிருந்து சிறந்த கேள்விகளை எதிர்பார்க்கிறேன்’’ - ரத்தன் டாட்டா!

’’உங்களிடமிருந்து சிறந்த கேள்விகளை எதிர்பார்க்கிறேன்’’ - ரத்தன் டாட்டா!

Sinekadhara

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர்  ரத்தன் டாட்டா. இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அப்போது இணையதளத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கத் தெரியாது. ஆனால் உங்களுடன் இன்ஸ்டாகிராமில் இணைந்ததில் மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து பேஸ்புக்கிலும் லட்சக்கணக்கானோர் அவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர். தற்போது பேஸ்புக்கில் ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், நிறையப்பேர் எனக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வருகிறீர்கள். என்னால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை. ஆனால் அதில் பல அருமையான கேள்விகள் வந்துள்ளன. அவற்றிற்கு நான் பதிலளிக்க விரும்புகிறேன். இன்ஸ்டாகிராமில் கேள்வி-பதில் வசதி இருப்பதை தற்போது தெரிந்துகொண்டேன். என்னால் முடிந்த சிறந்த பதில்களை ஞாயிற்றுக்கிழமை மாலை அதில் தருகிறேன். உங்களிடமிருந்து சிறந்த கேள்விகளை எதிர்பார்க்கிறேன் என்று டாட்டா குறிப்பிட்டுள்ளார்.

'Ratantata' என்ற பெயரில் உள்ள அவரது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் அவரிடம் விருப்பமான கேள்விகளைக் கேட்கலாம்.