டிரெண்டிங்

ஆடம்பர விவசாயியாக வலம் வந்த ஹேமா மாலினி - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

webteam

ஹெலிகாப்டரில் பறந்து வந்தும், பென்ஸ் காரில் குடை பிடித்தபடி வந்தும், கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு வந்தும் விவசாயிகளுக்கு உதவதுபோல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் ஹேமா மாலினியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் மதுரா நாடாளுமன்றத் தொகுதியில் நடிகை ஹேமா மாலினி பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்றார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மதுராவில் விவசாய பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் ஹேமா மாலினி வாக்குச் சேகரித்தார். அப்போது தங்க நிறப் புடவை அணிந்து கொண்டு வயலில் இறங்கி அறுவடை செய்தார். இந்தக் காட்சியை புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் அவரது ட்விட்டர் கணக்கு பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு உத்வேகத்துடன் பணிகளை தொடங்கியுள்ளதாக பதிவிட்டார்.

இதே போல் ஹெலிகாப்டரில் பறந்து வந்தும், பென்ஸ் காரில் குடை பிடித்தபடி வந்தும், கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு வந்தும் விவசாயிகளுக்கு உதவதுபோல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் ஹேமா மாலினி. அந்த வரிசையில் தற்போது கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு டிராக்டர் ஓட்டி வந்து பரப்புரையில் ஈடுபட்டார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. 

இந்தப் படங்களை கண்டவுடன் நெட்டிசன்கள் கொதித்து எழுந்து ஹேமா மாலினியை கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் டிராக்டரில் ஏர்கூலர் வைத்து அவர் பரப்புரையில் ஈடுபட்டார். அதைப்பார்த்து இது ஆடம்பரமான டிராக்டரா எனக் கேள்வி எழுந்துள்ளது. ஹேமா மாலினியின் இத்தகைய செயல்பாடுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.