“தமிழகத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் பாஜகவிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால் நிச்சயம் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்” என்றார் நடிகை நமீதா.
உதகை சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் போஜராஜை ஆதரித்து நடிகை நமீதா பரப்புரை செய்தார்.
அப்போது அவர் மேலும் பேசும்போது, “சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போஜராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டால் இம்மாவட்டத்தை உலக சுற்றுலா தலங்களில் முக்கியமாக திகழ பாடுபடுவார்.
மத்திய மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள திட்டங்கள், உங்களிடையே சரியான முறையில் சென்றடைய தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” என்று நமீதா பரப்புரை செய்தார்.