டிரெண்டிங்

“காவிரி மேலாண்மை ஆணையம் அரசிதழில் குழப்பம்” -மு.க.ஸ்டாலின்

“காவிரி மேலாண்மை ஆணையம் அரசிதழில் குழப்பம்” -மு.க.ஸ்டாலின்

webteam

மேட்டூர் அணை 12ம் தேதி திறக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

‌திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி விவகாரம் தொடர்பாக முழு விவரத்துடன் இல்லாமல் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்பது மட்டுமே அரசிதழில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு உள்நோக்கத்துடன் தெளிவின்மையையும், குழப்பத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு எழுவதாக தெரிவித்துள்ளார். தலைவர், உறுப்பினர்கள் கொண்ட நதி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்து, அணைகளை அதன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விரிவான விதிமுறைகளை உருவாக்க வேண்டும். 

மேலும் உச்சநீதிமன்றத்தால் திருத்தப்பட்ட காவிரி நடுவர் மன்‌ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அரசிதழ் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். காவிரி டெல்டா விவசாயிகளின் நீர்ப்பாசனத்திற்காக வரும் 12ம் தேதி மேட்டூர் அணை திறப்பதை அதிமுக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.