டெக்

தடுப்பூசி குறித்து தவறான தகவல்களைக் கொண்ட 1,30,000 வீடியோக்கள் நீக்கம் - யூ டியூப் அதிரடி

JustinDurai
தடுப்பூசிகள் குறித்து தவறான தகவல்களைக் கொண்ட வீடியோக்கள் அனைத்தையும் நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக யூ டியூப் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தாலும் ,சர்வதேச நாடுகளாலும் பாதுகாப்பானது என அறிவிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பும் வீடியோக்களை நீக்கும் வகையில் புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக யூ டியூப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி மஞ்சள் காமாலை, தட்டம்மை போன்ற பாதிப்புகளை தடுக்கும் வகையிலான தடுப்பூசிகள் குறித்த தவறான தகவல்கள் கொண்ட வீடியோக்கள் யூ டியூப் தளத்தில் இருந்து நீக்கப்படும்.
கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி குறித்து, மக்களுக்கு சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் வகையிலான வீடியோக்களை நீக்குவது என யூ டியூப் முடிவெடுத்தது முதல் இதுவரையில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இத்தகைய வீடியோக்களை பதிவிட்டவர்களின் கணக்குகளும் நீக்கப்படும் என்றும் யூ டியூப் நிர்வாகம் அறிவித்துள்ளது.