டெக்

ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனில் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தை வெளியிடும் யூடியூப்!

EllusamyKarthik

கூகுள் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் வீடியோ ஷேரிங் மற்றும் சமூக வலைதளமான ‘யூடியூப்’ தளம் டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சத்தை டெஸ்க்டாப் தளத்தில் அறிமுகம் செய்திருந்தது அனைவரும் அறிந்தது. இந்நிலையில் அந்த அம்சம் விரைவில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட போன்களை பயன்படுத்தி வரும் பயனர்களுக்கும் கிடைக்கப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பயனர்கள் சிலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மொபைல் போன் குறித்த தகவலை வெளியிட்டு வரும் GSM Arena இதனை தெரிவித்துள்ளது. டெஸ்க்டாப் வெர்ஷனில் இருப்பது போலவே ‘ஷோ டிரான்ஸ்கிரிப்ட்’ என்ற பட்டன் வீடியோ டிஸ்கிரிப்ஷனில் இடம் பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அம்சம் நீண்ட ரன்னிங்-டைம் கொண்ட வீடியோக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.