நீதிமன்றத்தில் இன்ஸ்டா ரீல் செய்த இளைஞர் pt
டெக்

சென்னை| குற்றவாளி கூண்டில் நின்றபடி இன்ஸ்டா ரீல்.. இளைஞர் செயலால் அதிர்ச்சி!

நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நின்றபடியே இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்து Instagram Reels வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

PT WEB

சென்னையில், குற்றவாளி கூண்டில் நின்றபோது எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ரீல்சாக பகிர்ந்த இளைஞர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். நீதிமன்றத்தில் வீடியோ எடுப்பது தடை செய்யப்பட்ட நிலையில், இந்த வீடியோ 3.62 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு இகைஞர் நீதிமன்ற கூண்டில் நின்றபோது எடுத்த வீடியோவை, கானா பாடல் பின்னணி இசையுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்சாக பகிர்ந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நீதிமன்றம்

வெளியாகியுள்ள அந்த வீடியோவில், Mr.super smoker boy என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் பரத் என்பவர் சமீபத்தில் குற்ற செயலில் ஈடுபட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற குற்றவாளி கூண்டில் நின்றபடி அதனை நீதிமன்றத்திற்கு உள்ளே இருந்த மற்றொரு நபர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கானா பாடல் இசையுடன் instagram-ல் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். 

நீதிமன்ற பகுதிகளில் வீடியோ எடுப்பது கடுமையாகத் தடை செய்யப்பட்ட நிலையில், அந்த நபர் எடுத்த வீடியோ தற்போது 3.62 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக வெளியிடப்பட்ட இந்த வீடியோ குறித்து பலரும் அந்த வீடியோவிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை வெளியிடுவது Contempt of Court உட்பட பல சட்ட பிரிவுகளுக்கு உட்பட்ட குற்றமாக பார்க்கும் நிலையில் இது போன்ற நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ள நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.