டெக்

இனி மறக்கவே மறக்காது: வருகிறது எமோஜி பாஸ்வேர்டு

webteam

அடிக்கடி பாஸ்வேடை மறந்துவிடுகிறவரா நீங்கள்? கவலை வேண்டாம். உங்களுக்கு பிடித்தமான அல்லது நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் எமோஜியை பாஸ்வேடாகப் பயன்படுத்தும் வசதி வர உள்ளது.

ஆண்ட்ராய்ட் மொபைலில் இந்த வசதியைக் கொண்டுவரும் பணியில் ஜெர்மனியின் பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், உல்ம் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். பயனாளர்கள் தங்களுடைய பாஸ்வேடை மறக்காத வண்ணம் இந்த லாகின் முறையை எப்படி எளிதாக்கலாம் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் ஒவ்வொரு முறை மொபைலை திறக்கும்போதும் ஒரு ஜாலியான உணர்வு ஏற்படும்.

பின் நம்பர்களை பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களுடைய பாஸ்வேடை மனப்பாடம் செய்ய வேண்டும். ஆனால் எமோஜியை எளிமையாக நினைவில் வைத்துக் கொள்ளலாம். பின் நம்பர்களை மற்றவர்கள் எளிமையாக கவனித்துவிட முடியும். ஆனால் ஈமோஜியைப் பொருத்தவரை 6 வேறுவேறு வகையான எமோஜிகளைப் பயன்படுத்தும்போது மற்றவர்கள் பார்த்தாலும் அவர்கள் நினைவில் கொள்வது கடினம். ஆனால் பயனாளர்கள் தங்கள் உணர்வின் அடிப்படையில் பாஸ்வேடுக்கான எமோஜிகளை தேர்வு செய்யலாம் என்பது கூடுதல் சிறப்பு.