டெக்

ஃபேஸ்புக் நேரடி ஒளிபரப்பு வசதியில் புதிய அப்டேட்..!

ஃபேஸ்புக் நேரடி ஒளிபரப்பு வசதியில் புதிய அப்டேட்..!

webteam

சுமார் 200 கோடி வாடிக்கையாளர்களை தன வசம் வைத்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம் நேரடி ஒளிபரப்பில் புதிய வசதியை கொண்டு வந்துள்ளது.

வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக புதிய வசதிகளை அப்டேட் செய்துவரும் ஃபேஸ்புக் கடந்த சில மாதங்களுக்கு முன் ஃபேஸ்புக் லைவ் வசதியை அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் பயனர்கள் தங்களின் சுவாரசிய நிகழ்வுகளை ஃபேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பி மகிழ்ந்தனர். இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஃபேஸ்புக் லைவ் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களின் மூலமே பேஸ்புக்கின் ஊடாக நேரடியாக வீடியோக்களை ஒளிபரப்பும் விதத்தில் இருந்தது. ஆனால் தற்போது லேப்டொப் மற்றும் டெக்ஸ்டாப் சாதனங்களில் வெப் கேமிரா வசதியுடன் நேரடியாக வீடியோக்களை ஒளிபரப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக். கணினிகளில் பேஸ்புக்கினை பயன்படுத்தும் பயனர்களுக்கு ஒரு சிறந்த வரப்பிரசாதமாக இந்த புதிய அப்டேட் அமைந்துள்ளது.

இந்த நேரடி வீடியோ ஒளிபரப்பை தொடங்குவது மிகவும் எளிது. ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் பதிவு செய்ய எப்படி “Whats on your mind” பகுதியை கிளிக் செய்வோமோ அதேபோல நேரடி வீடியோ ஒளிபரப்பு ஆப்ஷனை க்ளிக் செய்து வீடியோக்களை பதிவு செய்யலாம். இந்திய பயனாளர்களின் இணைய இணைப்பு வேகங்களில் இது எந்த அளவிற்குச் சிறப்பாக செயல்படும் என்பது பயன்படுத்தினால்தான் தெரியும்.