டெக்

வெளியானது ‘ரெட்மி 7எஸ்’ - விலை, சிறப்பம்சங்கள்

webteam

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ‘ரெட்மி 7எஸ்’ இன்று இந்தியாவில் வெளியிடப்பட்டது.

சீன நிறுவனமான சியோமி தங்கள் புதிய ஸ்மார்ட்போனான ‘ரெட்மி 7எஸ்’ என்ற மாடலை இந்திய சந்தைகளில் இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. கருப்பு, நீளம், சிவப்பு ஆகிய நிறங்களில் வெளிவந்துள்ள இதன் விலை ரூ.10,999 ஆகும். இந்த போனின் பின்புறத்தில் 48 எம்பி (மெகா பிக்ஸல்) மற்றும் 5 எம்பி என இரட்டைக் கேமராக்கள் உள்ளன. இந்த கேமராவின் மூலம் இரவு நேரத்திலும் துல்லியமாக போட்டோ பிடிக்க இயலும் என சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதவிர முன்புறத்தில் 13 எம்பி செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்த போன் 6.3 இன்ச் அளவு கொண்ட முழு ஹெசி டிஸ்ப்ளே இணைக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே எளிதில் உடையாத வகையில் கொரில்லா கண்ணாடி மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘ரெட்மி 7எஸ்’ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 பெய் இயங்குதளத்தில் இயங்கும் என்றும், குவால்கம் ஸ்நாப்ட்ராகன் 660 பிராசஸர் மூலம் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மெமரியை பொறுத்தவரையில் இரண்டு ரகங்களில் இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.10,999ல் வெளியாகியுள்ள மாடலில் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொண்ட மற்றொரு மாடல் வரும் 23ஆம் தேதி வெளியாகிறது. இதன் விலை ரூ.12,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.