ஜியோமி நிறுவனத்தின் ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் 7ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்களின் விற்பனைக்கு வருகிறது.
சீனா கைப்பேசி உற்பத்தி நிறுவனமான ஜியோமி, ரெட்மி 4ஏ ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து ஜியோமி ரெட்மி 5ஏ என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரெட்மி 5ஏ ஷாம்பெயின் கோல்டு, ஜெர்ரி மற்றும் பிளாட்டினர் கோல்டு ஆகிய மூன்று வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் டிசம்பர் 7ஆம் தேதி முதல் இந்த ஸ்டார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. ஃபிலிப்கார்ட் மற்றும் ஜியோமியின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இதனை வாங்க இயலும். இரண்டு ரகங்களில் வெளியாகும் இதன் விலை, ரூ.5,999 மற்றும் ரூ.6,999 ஆகும். ரூ.5,999 மதிப்புள்ள ரெட்மி 5ஏ, 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது. அத்துடன் கூடுதலாக 128 ஜிமி எஸ்.டி கார்டு இணைப்பு வசதி கொண்டது. ரூ.6,999 மதிப்புள்ள ரெட்மி 5ஏ, 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாகும்.
அத்துடன் இந்த இரண்டு ரக ஸ்மார்ட் போன்களும் 5 இன்ச் எச்.டி டிஸ்ப்ளேவுடன், குவாட் கோர் ஸ்னாப்டிராகன் 425 ப்ராசஸரை கொண்டுள்ளது. இதில் ஒரேநேரத்தில் 2 சிம் கார்டுகள் மற்றும் எஸ்.டி கார்டை பயன்படுத்த இயலும். 4 ஜி நெட்வொர்க் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் வோல்ட் இணைப்பும் கொண்டது. கேமராவை பொறுத்தவரையில் 13 எம்.பி ரியர் கேமரா, 5 எம்.பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தையும், 3000 எம்ஏஎச் பேட்டரி திறனையும் கொண்டுள்ளது. மேலும் கைரேகை பரிசோதனை மூலம் ஃபோனை அன்லாக் செய்யும் வசதியும் இதில் உள்ளது.