டெக்

சூப்பர் கேமரா மற்றும் சிறப்பம்சங்களுடன் வருகிறது சியோமி எம்.ஐ 10 அல்ட்ரா

Sinekadhara

சீன நிறுவனமான சியோமி கடந்த மே மாதம் எம்.ஐ 10, 5ஜியை வெளியிட்டது. மேலும் இந்த வரிசையில் எம்.ஐ 10 அல்ட்ரா என்ற மாடலை ஆகஸ்ட் 11ஆம் தேதி சீனாவில் வெளியிட உள்ளது. இது விரைவில் உலகளவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திர தின சிறப்பு சலுகையாக அமேசானில் சியோமி எம்.ஐ 5ஜி ரூ.42,999க்கு விற்பனைக்கு வர உள்ளது.

எம்.ஐ 10 வரிசை, சியோமியின் 10 வருட நினைவாக வெளியிடப்படுவதாக அதன் அதன் இணை நிறுவனர் லீ ஜுன் தெரிவித்துள்ளார். செராமிக்கால் ஆன இதன் வடிவமைப்பில், 8ஜிபி ரேம் மற்றும் 265ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இதில் 12ஜிபி ரேம் கொண்ட மற்றொரு வசதியும் வெளிவரவுள்ளது. மேலும் அதி மேம்படுத்தப்பட்ட 16ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வசதியும் வரவிருக்கிறது.

சிறப்பம்சங்கள்

புதிதாக வெளியிடப்பட்ட எம்.ஐ 10 இல் AMOLED TrueColor வசதியுடன்கூடிய 6.67 இஞ்ச் டிஸ்ப்ளே உள்ளது. இதில் HDR10+, FHD+ resolution, DCI-P3 colors மற்றும் 1120nits என்ற மிக திரை வசதியையும் பயன்படுத்தமுடியும். ஏனெனில் இது மைக்ரோடாட் - நோட்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. 5000000:1 என்ற மாறுபட்ட விகிதத்தில் காட்சிகளைக் காணமுடியும். இதற்கு முன்பு வந்த மாடல்களைவிட 25 சதவீதம் கூடுதல் வேகமுடையது. இந்த போனில் அதிக சூடாவதும் தடுக்கப்படுகிறது.

இதன் முக்கிய அம்சங்களில் ஒன்று கேமரா. பின்புறத்தில் மொத்தம் 4 கேமராக்கள் உள்ளன. 108 மெகா பிக்ஸலைக் கொண்டுள்ளது. சாம்சங்கில் பயன்படுத்தியுள்ள ஐசோசெல் ப்ரைட் எச்எம்எக்ஸ் சென்சாரே இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புற கேமராவில் 13 மெகாபிக்ஸல் சென்சார் மற்றும் இரண்டு 2 மெகாபிக்ஸல் சென்சார்களும் உள்ளன.

முன்புறத்தில் 20 மெகாபிக்ஸல் சென்சார் கொண்ட கேமரா உள்ளது. இதில் புரோ வீடியோ ரெக்கார்டிங் முறை, நைட் மோடு, போட்ரேட் மோடு போன்ற பல வசதிகளும் உள்ளன.

எம்.ஐ 10இல் 5ஜி நெட், வைஃபை 6, ப்ளூடூத், 2 அதிர்வெண் ஜிபிஎஸ், ஹை - ரெஸ் ஆடியோ, என்எஃப்சி, ஐ.ஆர் ஆகியவையும் இதில் உள்ளன. 4,780எம்.ஏ.ஹெச் பேட்டரி உள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.