டெக்

ஜியோமி 12 சீரிஸில் மூன்று ஸ்மார்ட்போன்கள் சந்தையில் அறிமுகம்

EllusamyKarthik

ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் உலக அளவில் முன்னணி நிறுவனமான ஜியோமி, 12 சீரிஸில் மூன்று ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டிஜிட்டல் சாதனம் சீன நாட்டில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜியோமி 12, 12 ப்ரோ மற்றும் 12X என மூன்று மாடல்கள் தற்போது அறிமுகமாகி உள்ளன. 

ஜியோமி 12 சிறப்பம்சங்கள்!

குவால்கம் ஸ்னாப்டிராகன் 8 Gen 1 CPU, 12 ஜிபி ரேம், 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 12 OS, 4500 mAh பேட்டரி, ரியர் சைடில் மூன்று கேமரா, 32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா மாதிரியானவை இதில் உள்ளன. 

ஜியோமி 12 ப்ரோவில் 5000 mAh பேட்டரி மற்றும் 6.73 இன்ச் டிஸ்பிளே இதில் இடம்பெற்றுள்ளது. மற்றபடி ரேம், இன்டர்னெல் ஸ்டோரேஜ், புராசஸர், ஆண்ட்ராய்டு இயங்குதளம் மாதிரியானவை ஜியோமி 12 போலவே உள்ளது.

ஜியோமி 12X போனை பொறுத்தவரையில் குவால்கம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் உள்ளது. அது மட்டும்தான் முதல் இரண்டு போன்களில் இருந்து இந்த மாடலை தனித்து காட்டுகிறது. 12 மாடல் போனை போல 6.28 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த போன். 

ஜியோமி 12 ரூ.37529, 12X ரூ.43395, 12 ப்ரோ ரூ.55126 விலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.