டெக்

இந்தியாவில் மலிவான விலையில் டேப்லெட்டை அறிமுகம் செய்கிறது சியோமி

EllusamyKarthik

எலக்ட்ரானிக் டிஜிட்டல் சாதனங்களை உற்பத்தி செய்து வரும் சீன தேசத்து நிறுவனமான சியோமி விரைவில் இந்தியாவில் டேப்லெட்டை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. ட்விட்டரில் இந்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதோடு அதற்கான கவுன் டவுன் டைமரையும் வெளியிட்டுள்ளது சியோமி. இருந்தாலும் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ள டேப்லெட் மாடல் குறித்து சியோமி தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. 

கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட MI Pad 5 டேப்லெட் சாதனத்தை சியோமி இந்தியாவில் லான்ச் செய்ய வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது. இதன் மூலம் இந்தியாவில் முதல் முறையாக சியோமி நிறுவனம் தனது டேப்லெட் விற்பனையை தொடங்குகிறது.

11 இன்ச் எல்.சி.டி டிஸ்ப்ளே கொண்டுள்ள MI Pad 5 டேப்லெட்டில் 8270mAh பேட்டரி, 33 வாட்ஸ் சார்ஜிங் வசதி, ரியர் சைடில் (பின்புறம்) இரண்டு கேமரா மாதிரியானவை இடம் பெற்றுள்ளது. அதே போல் சியோமி நிறுவனம் வேறொரு பிராண்டின் மூலம் இந்தியாவில் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் மலிவு விலையிலான டேப்லெட்டை அறிமுகம் செய்யும் எனவும் சொல்லப்படுகிறது.