Xiaomi இந்தியா நிறுவனம் இந்தியாவில் Xiaomi 15 சீர்ஸில் Xiaomi 15, Xiaomi 15 Ultra என்ற இரண்டு ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் Leica உடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட ஃபிளாக்ஷிப் லெவல் கேமரா இடம்பெற்றுள்ளது.
Xiaomi 15 Ultra, அல்ட்ரா போட்டோகிராபி கிட் லெஜண்ட் பதிப்புடன் மற்ற எந்த ஸ்மாட்போன்களை விடவும் சிறந்த கேமரா அனுபவத்தை ஒரு படி மேலே கொண்டு செல்கிறது. ஆண்ட்ராய்டுகளுக்கான சிறந்த செயலியான Qualcomm Snapdragon 8 Elite SoC உடன் இந்த போன்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
விலை:
Xiaomi 15 ஸ்மார்ட் ஃபோனானது இந்தியாவில் ரூ.64,999 விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 12GB+512GB ஸ்டோரேஜ் உடன் கருப்பு, வெள்ளை மற்றும் பச்சை வண்ணங்களில் கிடைக்கிறது. முன்பதிவில் ICICI வங்கி ரூ.5,000 கேஷ்பேக் சலுகையும் வழங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் கூடுதல் கட்டணம் இல்லாமல் ரூ.5,999 மதிப்புள்ள இலவச Xiaomi பராமரிப்பு திட்டத்தையும் வாடிக்கையாளர்கள் பெறுகிறார்கள். இதனால் பயனர்கள் ரூ.10,000 வரை பயன்பெறுகிறார்கள்.
அம்சங்கள்:
*Xiaomi 15 - 120Hz வரை புதுப்பிப்பு வீதத்துடன் 6.36-இன்ச் டிஸ்ப்ளே உடன் கிடைக்கிறது.
*5x ஜூம் வரை டிரிபிள்-கேமரா இடம்பெற்றுள்ளது. பேக் கேமரா 50MP Leica Summilux உடன், புகைப்படம் எடுப்பதற்காக லைட் ஹண்டர் ஃப்யூஷன் 900 சென்சாரை கொண்டுள்ளது.
*பயனர்கள் வெறும் 0.6 வினாடிகளில் நகர்தலை படம்பிடிக்க உதவும் Fastshot ஆதரவை பெறுகின்றனர்.
* 90W ஹைப்பர்சார்ஜ் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5240mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
விலை:
Xiaomi 15 Ultra- 16GB+512GB ஸ்டோரேஜ் உடன் ரூ.1,09,999 விலைக்கு சில்வர் வண்ணத்தில் கிடைக்கிறது. இந்த மொபைலானது ICICI வங்கியிடமிருந்து ரூ.10,000 கேஷ்பேக் சலுகையும், ரூ.11,999 மதிப்புள்ள இலவச Xiaomi 15 Ultra Photography Kit - Legend Edition வழங்கப்படுகிறது. இதனால் பயனர்கள் ரூ.20,000 வரை பயன்பெறுகிறார்கள்.
அம்சங்கள்:
*Xiaomi 15 Ultra - 6.73-இன்ச் WQHD+ AMOLED டிஸ்ப்ளே உடன் கிடைக்கிறது. இது 3200nits உச்ச பிரைட்னஸை ஆதரிக்கிறது.
*90W வேகமான சார்ஜிங் மற்றும் 80W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5410mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது.
*மேம்பட்ட கேமரா ஃபியூச்சர்கள் இடம்பெறுகின்றன. Sony LYT 900 சென்சார் மற்றும் 14EV உயர் டைனமிக் வரம்பைக் கொண்ட 1-இன்ச் 50MP Leica Summilux பிரதான கேமரா உள்ளது, இது 14mm முதல் 200mm ஆப்டிகல் தரமான ஜூம் வரம்பில் தரமான படத்தை வழங்குகிறது.
*200MP பெரிஸ்கோப் லென்ஸுடன் 120x அல்ட்ராஜூமை ஆதரிக்கிறது.
*ஒரு போட்டோகிராபி கிட் லெஜண்ட் பதிப்பும் தொகுக்கப்பட்டுள்ளது.