சமூக வலைதளங்களில் நம்முடைய படைப்புகளை பகிர்ந்து பணம் சம்பாதிக்க முடியும். அப்படி முழு நேரமும், சமூக வலைதளத்தில் கன்டென்ட் கொடுக்கக் கூடிய இன்ஃப்ளூயன்ஸர்களுக்கு சூப்பரான அப்டேட் ஒன்றை கொடுத்திருக்கிறது எக்ஸ் நிறுவனம். பொதுவாக யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக்டாக் மாதிரியான ஆப்களில் நாம் ஷார்ட்ஸ், ரீல்ஸ்களை ஷேர் செய்ய முடியும். இதில் சில ஆப்கள், அப்படி ஷேர் செய்யப்படக்கூடிய வீடியோக்களுக்கு ரெவன்யூ வழங்குகின்றன. இதன்மூலமாக கிரியேட்டர்கள், இன்ஃப்ளூயன்ஸர்கள் லட்சக்கணக்கில்கூட சம்பாதிக்க முடியும்.
தற்போது அந்த கிரியேட்டர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக எக்ஸ் நிறுவனம் ஒரு அப்டேட்டை கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, வேறு ஒருவர் பகிர்ந்த மூல வீடியோவை எடுத்து, ஒரு குட்டி கிளிப் ஆக கட் செய்து, அதில் உங்களுடைய கருத்துகளை பகிர்ந்து, உங்களுடைய ஐடியில் பதிவிடலாம். இப்படி பதிவிடும் முன்பாக, அந்த மூல வீடியோவின் கிளிப்-ஐ நீங்கள் வேறு ஒரு மூன்றாம் நபர் ஆப் மூலமாக எடிட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக எக்ஸ் தளத்திலேயே Video Clipping Tool என்கிற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி, நீங்கள் வீடியோவை கட் செய்துகொள்ள முடியும். ஆனால், வேறு ஒருவரின் வீடியோவை நீங்கள் கட் செய்து பகிர்வதால் உங்களின் கிளிப்பில் ஓனருக்கு கிரெடிட் கொடுக்கும் வகையில், Clip from என்கிற லேபிள் இடம்பெற்றிருக்கும்.
எனவே, அந்த வீடியோவை கிளிக் செய்த உடனேயே அது மூல வீடியோவுக்கு உங்களை கூட்டிக்கொண்டு போகும். இப்படி பதிவிடுவதன் மூலமாக, வீடியோ ஓனருக்கும், அதை கட் செய்து, கருத்தைச் சேர்த்து பதிவிடக் கூடிய உங்களுக்கும், கிடைக்கும் பார்வைகளைப் பொறுத்து வருவாய் கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது.
இதற்காக நாம் செய்ய வேண்டியது, எந்த மூல வீடியோவை ‘கிளிப்’ ஆக போட வேண்டும் என நினைக்கிறோமோ, அதை முதலில் ரீ-போஸ்ட் செய்து, அதில் காட்டப்படக் கூடிய, ‘கிளிப் வீடியோ’ என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, ட்ரிம்மர் ஆப்ஷன் மூலமாக, வீடியோவில் நமக்கு தேவையான விநாடிகளை தேர்வு செய்து, அதில் நம்முடைய கருத்தையும் சேர்த்து போஸ்ட் செய்துகொள்ள முடியும். என்னதான் வழிமுறைகள் எளிமையாக இருந்தாலும், லைவ் வீடியோக்களை இப்படி கட் செய்ய முடியாது. ஒரிஜினல் கிரியேட்டர் அவருடைய வீடியோவை நீக்கும் பட்சத்தில், நம்முடைய கிளிப் வீடியோவும் நீக்கப்படும். குறிப்பிட்ட அளவு ஃபாலோயர்கள் இருந்தால் மட்டுமே ரெவன்யூ வரும் என்பது மாதிரியான சில கட்டுப்பாடுகளும் இந்த திட்டத்தில் விதிக்கப்பட்டிருக்கிறது.