டெக்

தம்மாத்துண்டு சைஸில் ஒரு ஸ்மார்ட்போன்

webteam

இன்றைய இளைஞர்களின் மோகம் பெரிய டிஸ்ப்ளே உள்ள ஸ்மார்ட்போனை நோக்கியே பயணிக்கிறது. ஆனால் அதற்கு மாற்றாக போஷ் மொபைல் மைக்ரோ எக்ஸ் எனும் புதிய மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வெறும் 2.4 அங்குல திரை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் கைக்கு அடக்கமாக அழகாக வடிவமைக்க்கபட்டுள்ளது. இந்த சிறிய ஸ்மார்ட்போன், 650எம்ஏஎச் அளவிலான பேட்டரித்திறன் மற்றும் ஒரு 13 மெகாபிக்சல் பின்ப்புறகேமரா, 2 மெகாபிக்சல் முன்புற கேமராவையும் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4 இயங்குதளத்தில் செயல்படும் இந்த மொபைல், வால் அடாப்டர், சார்ஜ் கேபிள், ஹெட்போன்கள் போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்கள் அனைத்தும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு மைக்ரோ சிம் பொருத்தி இதனை பயன்படுத்தலாம்.

உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான இந்த ஸ்மார்ட்போன் ஐந்து அமெரிக்க டாலர்கள் என்ற விலையில் தற்போது அமேசான் வலைத்தளத்தில் விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது.