ஹெட்ஃபோன் பயன்படுத்தியதால் கேட்கும் திறனை இழந்த பெண் web
டெக்

நீண்ட நேரம் ஹெட்ஃபோன் பயன்பாடு.. 45% கேட்கும் திறனை இழந்த பெண்!

அதிக நேரம் ஹெட்ஃபோன் பயன்படுத்தியதால் காது கேட்கும் திறனை இழந்ததாக பெண் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.

PT WEB

தினசரி 8 மணி நேரம் ஹெட்ஃபோன் பயன்படுத்தியதால் தனது ஒரு காதின் கேட்கும் திறன் பாதியளவு குறைந்துவிட்டதாக ஒரு பெண் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஹெட்ஃபோன் பயன்பாட்டை குறைத்து கொள்ளுங்கள்..

அதிகநேரம் வயர்லெஸ் ஹெட்ஃபோனை பயன்படுத்தியதால் 45% கேட்கும் திறனை பெண் ஒருவர் இழந்துள்ளார். காது கேளாமையை சரிசெய்ய சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹெட்ஃபோன் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

காது கேட்பதில் சிக்கல் இருப்பதாக தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகுமாறும் தாமதித்தால் செவித்திறன் முழுவதும் இல்லாமல் போகும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆருஷிமா என்ற அந்த பெண் மேக் அப் கலைஞரின் பதிவு வைரலாகி வருகிறது.