செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு  புதிய தலைமுறை
டெக்

மனிதரின் பார்வை இழப்பை முன்கூட்டியே தடுக்கப்போகிறதா செயற்கை நுண்ணறிவு?

PT WEB

டோக்கியோ மருத்துவ பல்கலைக்கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட செயற்கை நுண்ணறிவு மாடல், நீண்டகால
அடிப்படையில் மையோபியா நோயாளிகளின் பார்வையிழப்பை தடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

கிட்டப்பார்வை எனப்படும் இந்தக் குறைபாடு உள்ளவர்கள் மிக அருகில் உள்ள பொருட்களை பார்க்க முடியும், ஆனால் தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க இயலாது. இந்த பிரச்னை உடையவர்களுக்கு பார்வையை சரிசெய்ய, கண் கண்ணாடிகள், கான்டாக்ட் லென்ஸ் மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

MACHINE LEARNING ALGORITHMS அடிப்படையில் கண்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிரச்னைகளை ஆய்வு செய்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சரி செய்ய வாய்ப்பிருப்பதை கண்டறிந்துள்ளதாக டோக்யோ மருத்துவ பல்கலைக்கழக ஆய்வாளர் யினிங் வாங் தெரிவித்துள்ளார்.