சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டர் இன்னும் சற்று நேரத்தில் நிலவில் தரையிறங்க உள்ளது. இந்நிலையில் நிலவின் தென் துருவத்தின் சிறப்பு என்ன?
நிலவின் தென் துருவ பகுதியில் எந்த ஒரு நாடும் இதுவரை லேண்டரை தரையிறக்கியதில்லை. நிலவின் தென் துருவ பகுதியில் பல மில்லியன் ஆண்டுகளாக சூரிய வெளிச்சம் பட்டத்தில்லை. ஆகவே இந்தப் பகுதியில் ஆராய்ச்சி செய்தால் சூரிய குடும்பம் குறித்த பல அரிய தகவல்கள் கிடைக்கும். சூரிய வெளிச்சம் படாத நிலவின் தென் துருவ பகுதியிலுள்ள பள்ளங்களில்100 மில்லியன் டன் நீர் இருப்பதாக கருதப்படுகிறது. நிலவின் தென் துருவ பகுதியின் நிலப்பரப்பில் மீத்தேன், அமோனியா, ஹைட்ரோஜன் உள்ளிட்ட வாயு இருப்பதாக கருதப்படுகிறது.